புதுடெல்லி:
ந்திய விமானத்தில் வைபை வசதி, விரைவில் செய்யப்படும் என விமான போக்குவரத்து செயலர் அறிவித்து உள்ளார்.
இந்திய விமான  பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று இந்திய விமானங்களிலும் வைஃபை வசதியைக் கொண்டுவர மத்திய அரசு இப்போது முடிவு செய்துள்ளது.
plane
இதன்மூலம், விமானத்தில் பறக்கும்போது மொபைலில் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் போன்ற சமுக வலைதளங்களை எளிதாக பயன்படுத்த இயலும்.
வெகு சீக்கிரத்தில் இந்திய உள்நாட்டு விமானங்களில் வைஃபை இண்டர்நெட் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது என சிவில் விமான போக்குவரத்து செயலர் ஆர்.என்.சவ்பே தெரிவித்தார்.
விமானத்துக்கு வரும் சமிஞ்ஞைகளுக்கு இடையூறாக இருக்கும் என்று கருதி விமானத்துக்குள் மொபைல், லேப்டாப் போன்ற கருவிகளைப் பயன்படுத்துவதற்கு இந்தியாவில் தடை இருந்து வருகிறது.
இந்தியாவில் மிரேட்ஸ், லுஃப்தான்ஸா, டர்கிஷ் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களே விமானத்துக்குள் இதுவரை வைஃபை இண்டர்நெட் வசதியை வழங்கி வந்தன.
இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விமானத்துறை அமைச்சகம் டெலிகாம் அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்து வருகிறது
இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இன்னும் பத்து நாட்களில் அரசிடமிருந்து எதிர்பார்க்கலாம் என தெரிகிறது.