பாரிஸ்

ந்தியாவில் உள்ள ஒய்சாலா கோவில்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

 

யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் கர்நாடகாவின் ஒய்சாலா கோவில்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.  இந்த பட்டியலில் கர்நாடகாவின் பேலூர், ஹாலேபித் மற்றும் சோம்நாத்புரம் ஆகியவற்றின் ஒய்சாலா கோவில்கள் இடம் பெற்று உள்ளன. இந்தியாவுக்கு இதன் மூலம் 42-வது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலம் என்ற அந்தஸ்து கிடைத்து உள்ளது.

யுனெஸ்கோ இது குறித்து வெளியிட்டு உள்ள எக்ஸ் பதிவில், இந்தியாவில் உள்ள ஒய்சாலா கோவில்கள் யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன. வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளது.

பிரதமர் மோடி இதற்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டு உள்ள எக்ஸ் பதிவில்,

“யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில், பிரமிக்கச் செய்யும் புனித தோற்றம் கொண்ட ஒய்சாலா கோவில்கள் சேர்க்கப்பட்டு உள்ளதால் இந்தியாவுக்கு அதிக பெருமை கிடைத்துள்ளது. 

இந்தியாவின் கலாச்சார பாரம்பரிய செறிவுக்குக் காலவரையற்ற அழகு மற்றும் சிக்கலான விவரங்களைக் கொண்ட ஒய்சாலா கோவில்கள்  தக்க சான்றாக உள்ளது.  இக்கோவில்கள் நம்முடைய முன்னோர்களின் தனிச்சிறப்புடனான கைவினை திறனை விளக்கும் வகையிலும் உள்ளன   

எனத் தெரிவித்து உள்ளார்.