சென்னை,
ந்திய வரலாற்றில் முதன்முறையாக இஸ்ரோ 83 செயற்கை கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்த இருக்கிறது.
வரும் ஜனவரி மாதம் இந்த செயற்கைகோள்கள் செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.
18th_pslv_c31
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தகவல்தொடர்பு , கடல்சார் ஆராய்ச்சி, வானிலை பயன்பாடு என பல்வேறு விதமான செயற்கை கோள்களை வடிவமைத்து ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்வெளியில் செலுத்தி வருகிறது.
வரும் ஜனவரி மாதம் ஒரே நேரத்தில் 83 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, நேற்று பாராளுமன்ற மேலவையில்  மத்திய அமைச்சர் (மாநிலங்கள்) ஜிதேந்திரா சிங் எழுத்துப்பூர்வமாக இந்த அறிவிப்பை தெரிவித்தார்.
அதில் வரும் ஜனவரி மாததில் இந்த செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
இஸ்ரோ இதுவரை 20 சாட்டிலைட்டுகளை ஒரே நேரத்தில் விண்ணுக்கு செலுத்தி உள்ளது. தற்போது ஒரே நேரத்தில் 83 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி முடிவு செய்துள்ளது.
இந்த 83 செயற்கைகோள்களில்  80  செயற்கை கோள்கள் வெளிநாடுகளை சேர்ந்தவை. இதன் மொத்த எடை 500 கிலோ என்று இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
இந்த செயற்கைகோள்கள் அனைத்தும்,  இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவிச்சர்லாந்து, அமெரிக்க நாடுகளை சேர்ந்தது. வர்த்தக ரீதியாக இந்த செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்படுவதாகவும், இதற்காக ஒப்பந்தம்  ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேசன் செய்துள்ளது.
வெளிநாட்டு செயற்கைகோள்களை தவிர மற்ற 3 செயற்கை கோள்களும் இந்தியாவுக்கு சொந்தமானது.
இதில் கார்டோசாட்-2 சீரிஸ் செயற்கைகோள்  730 கிலோ எடையுள்ளது. மேலும்  ஐஎன்ஸ் 1ஏ, ஐஎன்எஸ் 1பி. இந்த இரண்டு செயற்கைகோளின் எடையும் சேர்த்து 30 கிலோவாகும்.
இந்த 83 செயற்கைகோள்களும் ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்த இஸ்ரோ தயாராகி வருகிறது.

இது, இஸ்ரோ மட்டுமல்லாது இந்திய வரலாற்றிலும் ஒரு ‘மைல்கல்’ ஆகும்.

இஸ்ரோவின் பணி சிறக்க நாமும் வாழ்த்துவோம்….