கேன்பெரா:

மும்பையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மூதாட்டி ஒருவர் விமானத்தில் சென்றார். அவர் தனது பார்சல் ஒன்றில் ‘பாம்பே’ என்பதற்கு பதிலாக ‘பாம்’ என ஆங்கிலத்தில் எழுதிவிட்டார். கருப்பு நிறத்தில் உள்ள பார்சலில் பாம்பே டூ பிரிஸ்பன் என்பதற்கு பதிலாக பாம் டூ பிரிஸ்பன் (BOMB TO BRISBANE) என்று தவறுதலாக எழுதிவிட்டார்.

அதாவது பாம்பேயிலிருந்து பிரிஸ்பேவிற்கு பாம் (வெடிகுண்டு) அனுப்பப்பட்டுள்ளது என்று தவறாக புரிந்து கொண்டனர். இதை பார்த்த ஒரு பயணி விமான நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் விமானநிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த மூதாட்டியை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். பார்சலையும் பிரித்து சோதனையிட்ட பின்னர் தான் விமானநிலைய அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

அந்த பார்சலில் சிறிய எழுத்துகளால் மும்பை என எழுதியிருந்ததன் அர்த்தம் பின்னர் தான் புரியவந்தது. மகள் பிறந்தநாளுக்கு புதிய ஆடை எடுத்து பார்சல் செய்து கொண்டு வந்துள்ளார் மூதாட்டி. மேலும் மூதாட்டிக்கு மறதி அதிகம் என்பதா பார்சலில் எழுதி வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதன் பின்னர் மூதாட்டி விடுவிக்கப்பட்டார்.