வாஷிங்டன்:

அமெரிக்காவில் 2019ம் ஆண்டிற்கு ஹெச்1 பி விசா பெற 65,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அமெரிக்காவில் ஹெச்1 பி விசா வழங்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. குடியேற்ற அனுமதி இல்லாத இந்த விசா மூலம் அங்குள்ள நிறுவனங்கள் குறிப்பிட்ட துறையில் அனுபவம் பெற்ற வெளிநாட்டு பணியாளர்களை பணியில் அமர்த்திக் கொள்ள முடியும்.

இதன் மூலம் இந்தியா மற்றும் சீன ஐடி நிபுணர்கள் அதிகம் பயனடைந்து வருகின்றனர். டிரம்ப் அரசு பதவி ஏற்றவுடன் இந்த விசா முறைக்கு பல்வேறு கெடுபிடிகளை விதித்துள்ளது.

இந்நிலையில் 2019ம் நிதியாண்டில் இந்த விசா பெற 65 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்திருப்பதாக அமெரிக்காவில் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை துறை தெரிவித்துள்ளது. 20 ஆயிரம் பேருக்கு மட்டுமே விசா வழங்கப்படவுள்ளது.

இதனால் குலுக்கல் முறையில் விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் 2019ம் நிதியாண்டு தொடங்குகிறது.