பிரேசில்லா:

பிரேசில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனோசியோ லுலா டா சில்வாவுக்கு ஊழல் வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை வதித்து கடந்த வியாழக்கிழமை உத்தரவிடப்பட்டது.

அவர் சரணவடைய போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், தான் நிரபராதி என்றும் அவர் தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்தார்.

இவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்டை ரத்து செய்ய மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அவர் சரணடைய முடிவு செய்துள்ளார். 2 நாட்களாக யூனியன் கட்டடத்தில் தங்கியிருந்த அவர் போலீசில் சரணடைய புறப்பட்டுச் சென்றார்.

அப்போது அவரது ஆதரவாளர்கள் காரை மறித்து சரணடைய எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் அவர் தொடர்ந்து சென்று கரிதிபா சிறைக்கு சென்றார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தனியார் நிறுவனத்திடம் ரூ. 7 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பை லஞ்சமாக பெற்றதாக இவர் மீது தொடரப்பட்ட வழக்கில் தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் கருத்து கணிப்பில் இவர் முன்னிலை வகித்திருந்த நிலையில் இத்தகைய தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.