போலியான வேலை உத்தரவு : இந்திய தூதரகம் எச்சரிக்கை

 

புதாபி

டந்த ஆறு மாதங்களில் மட்டும் 700க்கும் மேற்பட்ட வேலை உத்தரவை அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் கண்டு பிடித்துள்ளது.  வேலை தேடுவோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

அரபு நாடுகளில் இருந்து போலியான வேலை உத்தரவுகள் அனுப்பி, சேவை கட்டணம் என்னும் பெயரில் மோசடி அதிகரித்து வருகிறது.  இது பற்றி பலரும் புகார் அளித்தவண்ணம் உள்ளனர்.  வெகு சிலரே, அது உண்மையான உத்தரவா என இந்திய தூதரகம் மூலம் பரிசோதிக்கிறார்கள்.

கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை அபுதாபியில் உள்ள இந்திய தூதரகத்துக்கு இது போல 792 வேலை உத்தரவு பரிசீலனைக்கு வந்துள்ளது.  பரிசோதித்ததில், 66 உத்தரவுகள் மட்டுமே உண்மையானவை எனவும், 700க்கும் மேற்பட்டவை போலியானவை எனவும் தெரிய வந்துள்ளது.

பல புகழ்பெற்ற அராபிய நிறுவனங்களின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட லெட்டர் ஹெட்டில் ஆணைகள் வருவதால் நன்கு படித்தவர்களும் ஏமாந்து விடுகின்றனர்.  அதில் காணப்படும் வாசகங்கள்,  சம்பள விகிதம் ஆகியவைகளும் அனைவரையும் கவரும் விதத்தில் உள்ளன.  இது போல சில அராபிய பல்கலைக்கழகங்கள் அனுப்பியது போன்ற வேலைவாய்ப்பு ஆணைகளும் தயாரிக்கப் படுகின்றன.  அவற்றை நம்பி ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து நிறைய மக்கள் ஏமாந்து விடுகின்றனர்.

தூதரகம் இது பற்றி பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.   ஆனால் மக்களை அந்த ஏமாற்று நிறுவனங்களும்,  அவர்கள் தெரிவிக்கும் சம்பளத் தொகையும் நம்பச் செய்து விடுகின்றன.

வேலைவாய்ப்பு ஆணை மற்றும் விசாவின் நகலை help@iwrcuae என்னும் முகவரிக்கு ஈ மெயில் அனுப்பி பரிசோதனை செய்துக் கொள்வது மிகச் சிறந்தது.


English Summary
Indian embassy at Abu dhabi cautions about fake job offer