இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கார் விபத்தில் சிக்கியது

Must read

சுர்வால், ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலத்தில் பயணம் செய்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் முகமது அசாருதின் கார் விபத்தில் சிக்கி உள்ளது.

 

முகமது அசாருதின் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக 1992, 1996 மற்றும் 1999 ஆம் வருட உலகக் கோப்பை போட்டிகளில் பதவி வகித்துள்ளார்.   குறிப்பாக 1999 ஆம் வருடம் அசாருதின் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதி வரை முன்னேறி உள்ளது.  முகமது அசாருதின் இந்தியாவுக்காக 99 டெஸ்ட் போட்டிகளிலும் 334 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.

இவர் தனது குடும்பத்தினருடன் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சோர்வால் என்னும் பகுதியில் காரில் பயணம் செய்துக் கொண்டிருந்துள்ளார்.  அப்போது அந்த கார் விபத்தில் சிக்கி கடுமையாகச் சேதம் அடைந்துள்ளது.  இந்த விபத்தில் அசாருதின் மற்றும் அவர் குடும்பத்தினர் யாருக்கும் பெரியதாகக் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article