லிபியாவில் கடத்தப்பட்ட இந்தியர்கள் மீட்பு

Must read

டில்லி:
லிபியாவில் கடத்தப்பட்ட இரு இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.
கடந்த வருடம் ஜூலை மாதம் ஆந்திராவை சேர்ந்த டி.கோபாலகிருஷ்ணன், தெலுங்கானாவை சேர்ந்த பல்ராமகிருஷ்ணன் ஆகியோர், லிபியாவில் பயங்கரவாதிகளால் கடத்தி செல்லப்பட்டனர். அவர்களது நிலை குறித்து எந்தவித தகவலும் தெரியாமல் இருந்தது.

சுஷ்மா சுவராஜ்
சுஷ்மா சுவராஜ்

இருவரையும்  மீட்க வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.  . அவர்களை மீட்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர்.இந்த நிலையில், இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டுவிட்டர் பக்கத்தில்தெரிவித்துள்ளார்.

More articles

Latest article