டில்லி

கொரோனா அவசர கால நிதிக்கு இந்திய ராணுவத்தினர் ஒரு நாள் ஊதியமாக ரூ.500 கோடி நன்கொடை அளித்துள்ளனர்.

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக பிரதமர் மோடி அறிவித்த கொரோனா அவசரகால நிதிக்குப் பலவேறு தரப்புகளில் இருந்தும் நிதி குவிந்த வண்ணம் உள்ளது.

முப்படை வீரர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சக ஊழியர்களின் ஒரு நாள் ஊதியமான சுமார் 500 கோடி ரூபாய் இந்த நிதிக்கு வழங்கப்படுவதாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.

அது மட்டுமின்றி தமது ஒரு மாத ஊதியத்தையும் பிரதமர் நிதிக்கு வழங்க அவர் முடிவு செய்துள்ளார்.

அதைத் தவிர தமது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் பிரதமர் நிதிக்கு விடுவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் இந்த நிதிக்கு தங்களால் ஆன பங்களிப்பைச் செய்யுமாறு ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.