வறான எண்ணத்தை ஏற்படுத்தும் காட்சியை நீக்குங்கள்..
இந்திய விமான படையில் சேர்ந்து 1999ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் பங்கேற்ற வர் பெண் விமானி குஞ்சன் சக்சேனா. அவரது வாழ்கை கதையாக உருவானது குஞ்சன் சக்சேனா இந்தி படம். இதில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி நடித்திருக்கிறார்.
நெட்ஃபிக்ஸ் ஒடிடி தளத்தில் இப்படம் வெளியிடப்பட்டது.

நெட்ஃபிக்ஸில் முதல் 10 இந்திய படங்களில் ஒன்றாக குஞ்சன் சக்சேனா படம் இடம் பிடித் திருக்கிறது. இந்திய விமானப்படை இந்த படம் மீது தங்களது அதிருப்தியை தெரிவித்திருக்கிறது. தங்கள் அதிகாரிகளை மோசமான முறையில் படத்தில் காட்டும் காட்சிகளை நீக்குமாறு தயாரிப்பாளர் கரண் ஜோஹர், நெட்ஃபிக்ஸ் மற்றும் மத்திய தணிக்கை குழு ஆகியோரிடம் கூறி உள்ளது.
விமான படையில் பயிற்சி பெறும்போது அதிகாரிகள் மற்றும் இணை விமானி களால் ஜான்வி அவமதிக் கப்படுவது போல் காட்சிகள் உள்ளன. குறிப்பிட்ட காட்சிகள் இந்திய விமானப் படை மீது தவறான எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் எனவே அக்காட்சிகளை விமானப்படையை வருத்தப்படுத்தியி ருப்பதால் அதனை நீக்க கூறி இருக்கிறார் களாம்.