2வது டி20: டாஸ் வென்ற நியூசிலாந்து அணி 16 ஓவருக்கு 129/5 ரன்கள் சேர்ப்பு

Must read

இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி 16 ஓவருக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை சேர்த்துள்ளது.

2nd

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணியை 80 ரன்கள் வித்யாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றிப்பெற்றது. இதனை தொடர்ந்து இரு அணிகளும் மோதும் 2வது டி20 போட்டி ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணியின் முன்ரோ மற்றும் செய்பெர்ட் முதலில் களமிறங்கினர். 3வது ஓவரிலேயே புவனேஷ்வர் குமார் பந்து வீச்சில் செய்பெர்ட் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து முன்ரோவுடன் கேப்டன் வில்லியம்சன் இணை சேர்ந்தார்.

இருவரும் 5 ஓவர்கள் வரை விக்கெட்டை விட்டுக் கொடுக்காமல் விளையாடினர். 6வது ஓவர் குர்னால் பாண்டியா வீசிய பந்தில் முன்ரோ ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த மிட்சலும் அடுத்தடுத்த குர்னால் பாண்டியாவின் பந்து வீச்சில் அவுட் ஆகினார். இதன் மூலம் 16 ஒவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களை எடுத்திருந்தது.

More articles

Latest article