ஐதராபாத்:

ந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ஐதராபாத் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

ஆட்டத்தின்போது, பேட்டை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ஞ் 2வது ஓவரிலேயே டக்அவுட்டாகி வெளியேறினார்.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா அணி 2-0 என்ற கணக்கி வென்றது.

தற்போது இருஅணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 2 ம் தேதி தொடங்கி மார்ச் 13ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

ஆட்டத்தின் தொடக்கத்தில்,  டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார் பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக ஆரோன் ஃபின்ச் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகிய இருவரும் களமிறங்கினர்.

முதல் ஓவரை ஷமி வீசினார். தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா, பேட்டிங் முனையில் நின்று முதல் ஓவரை எதிர்கொண்டார். முதல் பந்திலிருந்தே அபாரமாக வீசிய ஷமி, அந்த ஓவரை மெய்டன் செய்தார்.

முதல் ஓவரையே மெய்டனுடன் ஆரம்பித்துவைத்தார் ஷமி. இரண்டாவது ஓவரை வீசிய பும்ரா, மூன்றாவது பந்திலேயே ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச்சை வீழ்த்தினார்.

1.3 ஓவரில் முதல் விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா அணி. அந்த அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் 0(3) ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா வீசிய பந்தில் அவுட் ஆனார்.

5ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 13 ரன்கள் எடுத்துள்ளது. உஸ்மான் கவாஜா* 4(14) மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ்* 7(13) விளையாடி வருகின்றனர்.

மதியம் 2.30 மணி நிலவரப்படி, 5 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 13 ரன்கள் எடுத்துள்ளது. உஸ்மான் கவாஜா* 4(14) மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ்* 7(13) விளையாடி வருகின்றனர். ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.