லண்டன்:

இங்கிலாந்தில் தொழில்நுட்ப பணிகளில் சேர விசா கோரி விண்ணப்பிக்கும் நாடுகளில் இந்தியாவும் முன்னணியில் உள்ளது.


இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு தொழில்நுடப் பணிகளுக்காக விசாவுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த 2018-19-ம் ஆண்டில் விசா கோரி இந்தியாவிலிருந்து விண்ணப்பிப்போர் எண்ணிக்கை 45% அதிகரித்துள்ளது.

இங்கிலாந்துக்கு தொழில்நுட்ப பணிகளில் சேர விசா கேட்டு விண்ணப்பிப்போர் எண்ணிக்கையில் இந்தியாவும், அமெரிக்காவும் முன்னிலையில் உள்ளன.

இதற்கடுத்து, நைஜிரியா, ரஷ்யா, கனடா, ஆஸ்திரேலியா, சீனா, மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளிலிருந்து இங்கிலாந்து விசா கோரி விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

உலகம் முழுவதிலும் இருந்து திறமையாளர்களை இங்கிலாந்து கவர்ந்து இழுக்கிறது. கடந்த 2018-19ம் ஆண்டில் மிகவும் திறமையான விண்ணப்பித்துள்ளனர்.

திறமையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் 50 நாடுகளிலிருந்து இங்கிலாந்துக்கு 1,650 பேர் விசா கோரி விண்ணப்பித்துள்ளனர்.