ஹாங்காங்:

ஹாங்காங்கில் கைது செய்யப்படுவோரை, சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சர்ச்சைக்குரிய சட்ட மசோதா ரத்து செய்யப்பட்டதாக ஹாங்காங் அரசின் தலைவர் கேரி லாம் தெரிவித்துள்ளார்.


சர்சைக்குரிய இந்த மசோதாவை பல்வேறு அமைப்புகள் மட்டுமன்றி கேரி லாமின் ஆதரவு கட்சிகளும் எதிர்த்தன.

ஞாயிற்றுக்கிழமை அன்று மாபெரும் பேரணி நடைபெற்றது. இதனையடுத்து, கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் மசோதாவை கைவிடுவதாக லாம் அறிவித்தார்.

எனினும், இந்த மசோதாவை முழுமையாக கைவிட வேண்டும் என்றும் மசோதாவை நிறைவேற்றுவதை தள்ளிப் போடக்கூடாது என்றும் பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தின.

இந்த மசோதாவுக்கு சீனா முழு ஆதரவு கொடுத்தது. அதோடு மசோதாவை எதிர்த்துப் போராடியவர்களை வன்முறையாளர்கள் என சீனா விமர்சித்தது.

இந்நிலையில், போராடியவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு மற்றும் ரப்பர் குண்டுகளால் தாக்குதல் நடத்தியதை கண்டித்து கடந்த வெள்ளியன்று ஆயிரக்கணக்கான மாணவர்களின் பெற்றோர்கள் கண்டனம் தெரிவித்தனர்.