ப்ரட்டிஸ்லாவா:

ஊழலை எதிர்த்துப் போராடிய ஜுஜானா கேப்புதோவா ஸ்லோவோக்கியாவின் முதல் பெண் அதிபராக பதவியேற்றார்.


உயர் மட்ட ஊழலை விசாரித்த ஜான் குசியாக் என்ற பத்திரிகையாளர் கடந்த பிப்ரவரி மாதம் கொல்லப்பட்டார்.

இதனால் நடைபெற்ற தொடர் போராட்டத்தால் ஆளும் இடதுசாரி கட்சியான ஸ்மெர் ஆட்டம் கண்டது.
கேப்புதோவா ஸ்லோவோக்கியாவின் அதிபர் ஆகும் வரை, ஸ்மெர் கட்சிதான் மிகவும் பிரபலமாக கட்சியாக இருந்தது.

ஆளும் கட்சிக்கு ஒரு இடம் கிடைக்கக் கூடாது என்று திட்டமிட்டு பிரதான எதிர்கட்சி கேப்புதோவாவுக்கு ஆதரவு அளித்தது.

ஸ்லோவோக்கியா அதிபராக பொறுப்பேற்ற பின் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் அதிகாரிகள் வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள்.
பாகுபாடு இன்றி அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

அரசியல் சாசனப்படி, மக்கள் சுதந்திரமாகவும் கவுரவம் மற்றும் உரிமைகளில் சமமாகவும் பாவிக்கப்படுவார்கள். அநீதி இழைக்கப்படுவது அதிகரித்துள்ளதால் மக்கள் கோபமாக உள்ளனர் என்றார்.

கேப்புதோவா உயர் மட்ட ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.