டெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து உள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாமல் பல மாநிலங்கள் தடுமாறி வருகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2014 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 59 லட்சத்து 30 ஆயிரத்து 965 ஆக  உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும்  2 ஆயிரத்து 104 பேர் உயிரந்துள்ளதை அடுத்து,  இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த  எண்ணிக்கை 1 லட்சத்து 84 ஆயிரத்து 657 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 78 ஆயிரத்து 841 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை நாடு முழுவதும்  1 கோடியே 34 லட்சத்து 54 ஆயிரத்து 880 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டுள்ளனர்.

தற்போதைய நிலையில்,  22 லட்சத்து 91 ஆயிரத்து 428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

‘இதுவரை 13 கோடியே 23 லட்சத்து 30 ஆயிரத்து 644 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.