டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 30,941 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், 36,275 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுஉள்ளனர். அத்துடன் 350 பேர் கொரோனா தொற்று உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில், 3வது அலையை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டியதுடன், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.38 லட்சத்தை தாண்டியது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,941 பேர் பாதித்துள்ளனர்.இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,27,68,880 ஆக உயர்ந்தது.
தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று புதிதாக 350 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,38,560 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.34% ஆக குறைந்துள்ளது.
அதவேளையில், தொற்றில் இருந்து ஒரே நாளில் 36,275 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,19,59,680 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 97.53% ஆக உயர்ந்துள்ளது
தற்போதைய நிலையில் நாடு முழுவதும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,70,640 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.13% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 64,05,28,644 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]