டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,058 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இது 231 நாட்களுக்கு குறைந்த தினசரி பாதிப்பாகும். நேற்று 19,470 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில்,  164 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள (காலை 8 மணி வரை) தகவலின்படி நாடு முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் மேலும் புதிதாக 13,058 பேர் கொரோனாவால்  பாதித்துள்ளனர்.  இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,40,94,373 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 164 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம்,  இறந்துள்ளனர்  மொத்த உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,52,454 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில், தொற்று பாதிப்பில் இருந்து 19,470 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,34,58,801 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும், 1,83,118 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 59.31 கோடிக்கும் அதிகமான கோவிட் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

வாராந்திர நேர்மறை விகிதம் தற்போது 1.36%. தினசரி நேர்மறை விகிதம் 1.11%; 50 நாட்களுக்கு 3% க்கும் குறைவாகவும் உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 87,41,160 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை  98,67,69,411 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.