டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 100,36 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், 180 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரசின் 2ம் அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. தினசரி பாதிப்பு 3 லட்சத்தை கடந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக நோய்த்தொற்று குறைந்து வருகிறது. நோய்  அதிக பாதிப்பு  உள்ள மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குணமடைவோரின் எண்ணிக்கையும் உயர்கிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. உயிரிழப்பு 1.21 சதவீதமாகவும், குணமடையும் விகிதம் 93.94 சதவீதமாகவும் உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,00,636 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 2,89,09,975 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 2427 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3,49,186 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,74,399 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2,71,59,180 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 14,01,609 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தடுப்பூசி நிலவரம் (07 ஜூன், 2021, காலை 8.00 மணி வரை)இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் மொத்த எண்ணிக்கை: 23,27,86,482

கடந்த 24 மணி நேரத்தில் செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை: 13,90,916

நாடு முழுவதும் இதுவரை  36,63,34,111 மாதிரிகள் சோதன செய்யப்பட்டு உள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 15,87,589 பேருக்கு சோதனை நடத்தப்பட்டு என ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது.