சென்னை: தமிழகத்தில் பொதுமுடக்கத்தில் இருந்து இன்றுமுதல் பல்வேறு தளர்வுகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதால், சென்னையில் புறநகர் மின்சார ரெயில்களின் சேவை அதிக்கப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று 2வது அலையின் திவிர தாக்கம் காரணமாக, தளர்வுகளற்ற பொதுமுடக்கம் கடந்த 2 வாரங்களாக அமலில் இருந்தது. தற்போது தொற்று ஓரளவு குறைந்து வருவதால், இன்றுமுதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதையடுத்து, புறநகர் ரயில்சேவைகளை அதிகரித்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி,  இன்று முதல் மின்சார ரெயில்களின் சேவை அதிகரிக்கப்பட்டு 279 மின்சார ரெயில்கள் இயக்கப்படும். சென்னை-திருவள்ளூர், அரக்கோணம் மார்க்கத்தில் 48 ரெயில்களும், திருவள்ளூர், அரக்கோணம்-சென்னை மார்க்கத்தில் 49 ரெயில்களும் சென்னை கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 44 ரெயில்களும், தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர்- சென்னை கடற்கரை மார்க்கத்தில் 44 ரெயில்களும்,  இயக்கப்படுகின்றன.இயக்கப்படுவதாக அறிவித்துள்ளது, அதேநேரத்தில் ஞாயிறு கால அட்டவணையில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

சென்னை-கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மார்க்கத்தில் 24 ரெயில்களும், கும்மிடிப்பூண்டி, சூலூர் பேட்டை-சென்னை 24 ரெயில்களும், சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே 12 ரெயில்களும், வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே 17 ரெயில்களும் இயக்கப்படுகின்றன.

சென்னை கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 44 ரெயில்களும், தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர்- சென்னை கடற்கரை மார்க்கத்தில் 44 ரெயில்களும் இயக்கப்படுகின்றன.

ஆவடி-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இ டெப்போ இடையே 2 ரெயில்களும், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இ டெப்போ-ஆவடி, பட்டாபிராம்-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இ டெப்போ இடையே 4 ரெயில்களும் இயக்கப்படுகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.