சீரானது முடக்கப்பட்ட இந்திய வானிலை ஆய்வு மையத்தின் டுவிட்டர் கணக்கு

Must read

புதுடெல்லி:
முடக்கப்பட்ட இந்திய வானிலை ஆய்வு மையத்தின் டுவிட்டர் கணக்கு சீரானது.

நாட்டின் தட்பவெப்ப நிலை, மழை, புயல், சூறாவளி காற்று உள்ளிட்ட வானிலை நிலவரங்களை அவ்வப்போது பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி அவர்களை எச்சரிக்கையுடன் இருக்கச்செய்யும் பணியில் இந்திய வானிலை ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2.46 லட்சம் பேர் பின்பற்றும் இந்த மையத்தின் டுவிட்டர் கணக்கை மர்ம நபர்கள் நேற்று முடக்கினர்.

இதுதொடர்பாக வானிலை மைய இயக்குனர்-ஜெனரல் மிருத்யுஞ்ஜெய் மகாபத்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், முடக்கப்பட்ட
வானிலை மைய டுவிட்டர் கணக்கு சிறிது நேரத்துக்குப் பிறகு மீட்டெடுக்கப்பட்டது என்று கூறினார்.

More articles

Latest article