புதுடெல்லி:
ந்தியாவில் போதுமான அரிசி கையிருப்பு உள்ளது என்று ஒன்றிய உணவுத்துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,  உலகின் மிகப்பெரிய அளவில் அரிசி ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. நம்மிடம் ஏராளமான அரிசி இருக்கிறது. அதனால் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை.அதனால் யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்று கூறியுள்ளார்.