பொருளும் அருளும் இல்லாதவர்கள் சமமாக வாழும் திரிசங்கு நிலையில் உள்ள நாடாக மாறிவருகிறது இந்தியா என்பது உலக சமத்துவமின்மை அறிக்கை (World Inequality Report) மூலம் தெரியவந்துள்ளது.

அரசாங்கங்களை விட பெரு முதலாளிகளிடம் மலைபோல் பொருள் குவிந்து வருவதால் 200 ஆண்டுகளுக்கு முன் நிலவிய ஏகாதிபத்திய ஆட்சியை இந்த அறிக்கை மூலம் இப்போது கண்கூடாக பார்க்க முடிகிறது.

நாட்டில் உள்ள வளத்தில் ஒரு சிறு துளிகூட அடித்தட்டு மக்கள் பாதி பேருக்கு கிடைக்கவில்லை என்பது புலப்படுவதோடு, நாட்டின் மொத்த வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கு அதாவது 1 சதவீதம் மட்டுமே உள்ள முதல் நிலை பணக்காரர்களிடம் குவிந்துகிடக்கிறது.

இந்திய மக்கள் தொகையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ. 2,04,200 ஆக உள்ள நிலையில், கீழ் நிலையில் உள்ள 50 சதவீத மக்களின் ஆண்டு வருமானம் சராசரியாக ரூ 53,610 ஆகவே உள்ளது.

அதிலும் மேலே உள்ள 10 சதவீதம் பேரின் ஆண்டு வருமானம் இதை விட 20 மடங்கு அதிகமாக அதாவது ரூ. 11,66,520 ஆக உள்ளது.

நாட்டின் மொத்த வருமானத்தில் 57 சதவீதம் மேல்நிலையில் உள்ள 10 சதவீதம் பேரிடமும், 22 சதவீத வருமானம் உச்சத்தில் உள்ள 1 சதவீத பெரும் பணக்காரர்களிடமும் உள்ளது ஆனால் அடித்தட்டு மக்களின் வருமானம் வெறும் 13 சதவீதம் மட்டுமே என்கிறது இந்த அறிக்கை.

உயரடுக்கு செல்வந்தர்களுடன் கூடிய சமத்துவமற்ற ஏழை நாடாக இந்தியா தனித்து நிற்பது இந்த புள்ளிவிவரங்கள் பறைசாற்றுகின்றன.

சராசரியாக இந்திய குடும்பம் ஒவ்வொன்றும் ரூ. 9,83,010 மதிப்புள்ள சொத்து வைத்துள்ளது, இதில் கீழ்நிலையில் உள்ள 50 சதவீதம் பேரின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 66,280 மட்டுமே.

உச்சத்தில் உள்ள அந்த ஒரு சதவீத பெரும் பணக்காரர்களிடம் நாட்டின் மொத்த சொத்தில் 65 சதவீதம் அதாவது சராசரியாக ரூ. 3,24,49,360 மதிப்புள்ள சொத்து வைத்திருக்கிறார்கள்.

மேல்நிலையில் உள்ள 10 சதவீதம் பேரிடம் சராசரியாக ரூ. 63,54,070 மதிப்புள்ள சொத்து அதாவது நாட்டின் மொத்த சொத்தில் 33 சதவீதம் உள்ளது.

ஒழுக்கமான வாழ்க்கை முறையை கடைபிடிக்க தேவையான செல்வமோ மூலதனமோ மக்கள் தொகையில் ஏறக்குறைய பாதிபேரிடம் இல்லை என்பதை இந்த அறிக்கை உணர்த்துவதோடு

இந்த சமத்துவமற்ற உலகில் ஏழை பணக்காரர்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்து வரும் நிலையில் இப்போது பிறக்கும் குழந்தைகளின் நிலை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.