வான் இலக்கை தாக்கும் குறுகிய தூர ஏவுகணை சோதனை வெற்றி

Must read

ஒடிசா: 
வான் இலக்கை தாக்கும், குறுகிய தூர ஏவுகணையைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம்  வெற்றிகரமாகச் சோதனை செய்தது.
இந்த சோதனை ஒடிசா கடற்கரையில் உள்ள சாந்திபூர் ஒருங்கிணைந்த பரிசோதனை மையத்தில் மேற்கொள்ளப்பட்டது.
குறுகிய தூரத்தில் உள்ள எலக்ட்ரானிக் இலக்கை தாக்கும் வகையில், இந்த ஏவுகணை, செங்குத்தான  ஏவுதளத்திலிருந்து ஏவிப் பரிசோதிக்கப்பட்டது.
தற்போதைய சோதனை வெற்றி பெற்றதற்காக டிஆர்டிஓ மற்றும் இந்தியக் கடற்படையினர் மற்றும் தொழில்துறையினருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த ஏவுகணையின் அடுத்தகட்ட  சோதனைகள்  போர்க்கப்பலிலிருந்து ஏவிப் பரிசோதிக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article