மின்சார திருத்தச் சட்டத்தை நிறுத்திவைக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Must read

மத்திய அரசு கொண்டு வரவுள்ள மின்சார திருத்தச் சட்டம் மாநில அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளில் தலையிடுவதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த சட்ட திருத்தத்தை நிறுத்திவைக்குமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு இன்று அனுப்பியுள்ள கடிதத்தில், இந்த சட்ட திருத்தம் தனியார் மின் நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பொதுத் துறை நிறுவனங்களை பாதிக்கும் வகையில் உள்ள இந்த சட்ட திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மாநில அரசுகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதாக அமைந்து விடும் என்பதால் இதுகுறித்து அனைத்து தரப்பினரையும் ஆலோசித்து உரிய முடிவு எட்டப்படும் வரை நிறுத்திவைக்குமாறு கூறியிருக்கிறார்.

More articles

Latest article