கொல்கத்தா:

சூப்பர் எமர்ஜென்ஸியை நோக்கி இந்தியா சென்று கொண்டிருப்பதாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.


தேர்தல் பிரச்சாரத்தில் போது பாஜகவுக்கும் மம்தாவுக்கும் இடையே பெரும் போரே நடந்தது.
மோடியை தாம் பிரதமராகவே கருதவில்லை என்று அவர் பேசியது பாஜக மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பாஜகவும் மேற்கு வங்கத்தில் காலூன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது.

அதேபோல், தேர்தலில் பெரும் வெற்றியும் பெற்றது. இதனையடுத்து, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து பாஜகவில் சேர்ந்து வருகின்றனர்.

இதனால்,தேர்தலுக்குப் பின்னும் பாஜக-மம்தா மோதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், கடந்த 1975-ம் ஆண்டு இதே நாளில் தான் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி எமர்ஜென்சியை கொண்டு வந்தார்.

1977-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி வரை எமர்ஜென்ஸி நீடித்தது. இன்று எமர்ஜென்ஸி கொண்டு வந்த தினம்.
அதேசமயம் கடந்த 5 ஆண்டுகளாக இந்தியா சூப்பர் எமர்ஜென்ஸியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

கடந்த கால வரலாற்றிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டும். நாட்டின் ஜனநாயக அமைப்புகளை பாதுகாக்க நாம் போராட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.