சர்வதேச பயணிகள் விமானத்திற்கு ஆகஸ்ட் 31 வரை தடை நீட்டிப்பு! சிவில் ஏவியேஷன் இயக்குநரகம்

Must read

டெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடையை ஆகஸ்ட் 31 நள்ளிரவு வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் அறிவித்துஉள்ளது.

கொரோனா தொற்ற பரவல் தடுப்பு நடவடிக்கையாக உலக நாடுகள் கடந்த ஆண்டு மார்ச் முதல்  விமான போக்குவரத்தை முற்றிலுமாக தடை செய்துள்ளன. பின்னர் தொற்று பரவல் குறையத் தொடங்கியதும், முதல்கட்டமாக சரக்கு விமான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கியது. மேலும் வெளிநாடுகளில் சிக்கிய தங்களது நாட்டவர்களை அழைத்து வரும் வகையில் சிறப்பு பயணிகள் விமானம் இயக்கப்பட்டது. பின்னர், மேலும் தொற்றுகள் குறைந்த நிலையில், பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளுடன் கடந்த சில மாதங்களாக பயணிகள் விமானம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால்,.  சர்வதேச விமான போக்குவரத்திற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு அதற்கக்கான கால அவகாசம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது.

தற்போது மத்தியஅரசு, கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கை தளர்வுகளுடன் ஆகஸ்டு 31ந்தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து, சர்வதேச விமானங்களுக்கான தடையை ஆகஸ்டு 31ந்தேதி வரை  நீட்டித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்து உள்ளது. இந்த தடை சர்வதேச சரக்கு விமானங்களுக்கு இந்த தடை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் சுமார் 31.13 லட்சம் உள்நாட்டு பயணிகள் விமானத்தில் பயணம் செய்ததாகவும், இது மே மாதத்தில் பயணம் செய்த 21.15 லட்சத்தை விட 47 சதவீதம் அதிகமாகும் என சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

 

More articles

Latest article