இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கபடி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. மூன்றவது முறையாக ‘ஹாட்ரிக்’ சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

unnamed_1477156174-800இந்தியா, தாய்லாந்து, தென்கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஈரான், அர்ஜென்டினா, போலாந்து, கென்யா, அமெரிக்கா, இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய 12 அணிகள் பங்கேற்ற உலகக்கோப்பை கபடிப்போட்டி நேற்று முடிவடைந்தது.

அரையிறுதியில் தாய்லாந்து அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதே போல் மற்றொரு அரையிறுதிப்போட்டியில் ஈரான் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இவ்விரு அணிகள் மோதும் இறுதிப் போட்டி நேற்று அகமதாபாத்தில் இந்திய, ஈரான் அணிகள் இறுதிப்போட்டியில் மோதிக்கொண்டன.

நேற்று இரவு 8.00 மணிக்கு துவங்கிய இறுதிப் போட்டியில் இந்தியா – ஈரான் கடுமையாக மோதிக்கொண்டது. கபடியில் சூரனாக விளங்கும் இந்தியா அணிக்கு ஈரான் அணி கடும் நெருக்கடி கொடுத்தது. தொடக்கத்தில் இந்தியா முன்னிலை பெற்றலும், ஈரான் வீரர்கள் அதிகம் அதிகமானது. இதனால் முதல் பாதி நேரமான 20 நிமிடம் முடிவில் ஈரான் 18-13 என முன்னிலைப் பெற்றது.

இடைவேளைக்குப்பின் இரண்டாம் பாதி துவங்கியது. சைடு மாறிய பின்னர், இந்தியா வீரர்களின் ஆட்டத்தில் அனல் பறந்தது. ரைடு மற்றும் கேட்சிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். இதனால் இந்திய அணி மளமளவென புள்ளிகள் பெற்றது. இறுதியில் இந்தியா 38-29 என்ற அடிப்படையில் 9 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது.

மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்ற, இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து முக்கிய பிரபலங்கள் பலரும் இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.