தோனி சாதனை: 9000 ரன்களை ஒருநாள் போட்டிகளில் எட்டிய 5-வது இந்திய வீரர்

Must read

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 9000 ரன்களை எட்டிய 5-வது இந்திய வீரர் மற்றும் மூன்றாவது விக்கெட் கீப்பர் என்ற பெருமையை இந்திய அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி பெற்றிருக்கிறார்.
dhoni
இச்சாதனையை நியூசிலந்து அனியுடன் நேற்று நடந்த ஒருநாள் போட்டியில் தோனி நிகழ்த்தியிருக்கிறார். இதற்கு முன் சச்சின் தெண்டுல்கர் (18,426 ரண்கள்), சவ்ரவ் கங்குலி (11,363 ரன்கள்), ராகுல் டிராவிட் (10,889 ரன்கள்) மற்றும் முகமது அசாருதீன் (9378 ரன்கள்) ஆகியோர் இந்த சாதனையை எட்டியிருந்தவர்கள்.
அதே போல சர்வதேச அளவில் இச்சாதனையை எட்டிய மூன்றாவது விக்கெட் கீப்பர் தோனியாவார் இதற்கு முன் இலங்கையின் குமார சங்கக்கரா (14,234 ரன்கள்) ஆஸி. அணியின் ஆடம் கில்கிறிஸ்ட் (9619 ரன்கள்) ஆகியோர் இச்சாதனையை எட்டியவர்கள்.

More articles

Latest article