மேலும் 47 சீன செயலிகளுக்கு தடை… மத்தியஅரசு

Must read

டெல்லி:
ந்தியாவில் மேலும் 47 சீன செயலிகளுக்கு தடை விதித்துள்ளது மத்தியஅரசு. மேலும் 275 செயலிகள் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்து உள்ளது.

இந்தியா சீனா இடையே நடைபெற்று வரும் எல்லை பிரச்சினையைத் தொடர்ந்து, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சீன மொபைல் செயலிகளான  டிக் டாக், ஷேர்சாட், யுசி பிரவுசர் உள்பட உட்பட சீன நாட்டைச் சேர்ந்த 59 செயலிகளுக்கு மத்திய அரசு  (29/06/2020)  தடை விதித்தது.
இதையடுத்து, . அந்த செயலிகளை தனது பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நிறுவனமும,  ஆப்பிள் ஸ்டோர்ரில் ஆப்பிள் நிறுவனமும் நீக்கியது.
இந்த நிலையில் தற்போது மேலும் 47 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.  ஏற்கனவே தடை செய்யப்பட்ட செயலிகளின் .குளோன்’ (ஒரிஜினல் செயலியைப் போல இயங்கும் போலி) ஆக இயங்கிய 47 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
மேலும், 275 சீன செயலிகள் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், இந்த செயலிகளின் தகவல் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இவற்றுக்கும் தடை விதிக்க வாய்ப்பு உள்ளது.
ஜியோமி, அலி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட செயலிகள் தடை செய்யப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

More articles

Latest article