டில்லி

ரும் ஞாயிறு அன்று அரவிந்த் கெஜ்ரிவால் கைதை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் மாபெரும் பேரணி நடத்தப்பட உள்ளது

டில்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து. விசாரணைக்கு ஆஜராகும்படி 9 முறை சம்மன் அனுப்பியும்   கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை 21 ஆம் தேதி இரவு கைது செய்து அவர் டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டார். கெஜ்ரிவாலை 6 நாட்கள் (28ம் தேதி வரை) அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியதால் அவர் அமலாக்கத்துறை காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

விரவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டில்லி முதல்வர் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் மாபெரும் பேரணி நடத்தப்பட உள்ளது. வரும் ஞாயிறு  அன்று காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக் கட்சிகள் டில்லி ராம்லீலா மைதானத்தில் மாபெரும் பேரணி நடத்த உள்ளன.

பேரணியில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மி, தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் பங்கேற்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பா.ஜ.க. அரசு விசாரணை அமைப்புகளை ஏவி எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைப்பதாக இந்தியா கூட்டணி குற்றஞ்சாட்டியுள்ளது.