இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெறும் பகலிரவு டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று துவங்கியது.

முதலில் களமிறங்கிய இந்திய அணி 132 ரன்கள் எடுத்த நிலையில் 44.1 ஓவர் முடிவில் மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் தடைபட்டது.

இன்று மீண்டும் ஆட்டம் துவங்கிய நிலையில், 80 ரன்களுடன் களமிறங்கிய ஸ்ம்ரிதி மந்தனா சதமடித்தார்.

127 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஸ்ம்ரிதி மந்தனா இந்த சதத்தின் மூலம் பகலிரவு டெஸ்ட் போட்டியில் சதமடிக்கும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றதோடு ஆஸ்திரேலிய மண்ணில் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் நிகழ்த்தினார்.

மோசமான வானிலை காரணமாக இரண்டாவது நாள் ஆட்டமும் நிறுத்தப்பட்ட நிலையில், இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்திருக்கிறது.