ஐபிஎல்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி 

Must read

துபாய்: 
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்க்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்க்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக  வெங்கடேஷ் ஐயர் 67 ரன்கள் அடித்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சாளர்களில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்களையும், ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டையும், முகமது ஷமி ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.
166 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய பஞ்சாப் கிங்க்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த அணியில் கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 57 ரன்கள் எடுத்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்களையும், சிவம் மாவி, சுனில் நரைன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.
ஐபிஎல் தொடரில் நாளை 2 போட்டிகள் நடக்க உள்ளது. ஷார்ஜாவில் மதியம் 3.30 மணிக்கு நடக்க உள்ள  போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், இரவு 7.30 மணிக்கு அபுதாபியில் நடக்க உள்ள போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிகளும் மோத உள்ளன.  

More articles

Latest article