Skip to content
  • Sat. Sep 19th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

மாணவர்கள் இன்றி பள்ளிகளில் சுதந்திர தின நிகழ்ச்சி! தமிழக அரசு

Aug 13, 2020

சென்னை: நாடு முழுவதும் ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலை யில், பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில்  மாணாக்கர்கள்,  மூத்த குடி மக்கள் பங்கேற்க வேண்டாம் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தலைமை செயலக கோட்டை கொத்தளத்தில் 15ந்தேதி காலை 8.45க்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக்கொடி ஏற்றுகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில் தியாகிகளும், பொதுமக்களும், மாணவர்களும், பள்ளிக்குழந்தைகளும் பங்கேற்பர். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளிக்குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மாவட்டம் தோறும் 10 சுதந்திர போராட்ட தியாகிகளின் வீடுகளுக்கே சென்று பொன்னாடை செலுத்தி மரியாதை செலுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

அதேபோல் சமூக நலத்துறை அமைச்சர் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்கியுள்ள விடுதிக்கு சென்று இனிப்பு பெட்டகத்தை மாணவர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்படுகிறார்.

முன்களப்பணியாளர்களுக்கு முதல்வர் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்க உள்ளார்.

சுதந்திர தின விழாவை காண பொதுமக்கள், மாணவர்கள், பள்ளிக்குழந்தைகள் நேரில் வரவேண்டாம்,

தொலைக்காட்சி மற்றும் வானொலியில் கண்டு/கேட்டு ரசிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கொரோனா பணியில் ஈடுபட்ட முன்களப்பணியாளர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கி முதலமைச்சர் சிறப்பிக்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,சுதந்திர தின விழாவில் பங்கேற்க மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது.

அனைத்து பள்ளிகளிலும் தனிநபர் இடைவெளியை பின்பற்றி எளிய முறையில் விழாவை கொண்டாடவும், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களை அழைத்து சிறப்பிக்க வேண்டும்.

சுய விருப்பத்தின்அடிப்படையில் கலந்துகொள்ளும் மாணவர்களை மட்டுமே விழாவில் அனுமதிக்க வேண்டும்.

தற்போதைய கரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு, விழாவில் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என்பன உட்பட பல்வேற வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Post navigation

கைலாசா நாடு ரெடி: ஆகஸ்டு 22ந்தேதி அன்று முக்கிய அறிவிப்பு வெளியிடும் நித்யானந்தா!
மத்திய அரசு விருது பெறும் ஆறு தமிழக காவல் அதிகாரிகளில் ஐவர் பெண்கள்

Related Post

தமிழ் நாடு

தமிழகத்தில் புதிதாக 7 அரசு செவிலியர் கல்லூரிகள்! இந்த ஆண்டு முதலே மாணவர் சேர்க்கை…

தமிழ் நாடு

₹2,109 கோடி பாக்கி… தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறும் ஒப்பந்ததாரர்கள்!

தமிழ் நாடு வர்த்தக செய்திகள்

60 ஆண்டுகளுக்கும் மேலான சில்லறை வணிக வரலாற்றைக் கொண்ட ‘விவேக்ஸ்’ தனது விற்பனை நிலையங்களை மூடியது

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer