சென்னை: தமிழ்நாட்டில் நாளுக்குநாள் குற்றச்சம்பவங்கள், போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில்,  சென்னை பெருநகர மாநகராட்சி பகுதியில் மட்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட பெண் உள்பட  26 பேரை காவல்துறை அதிரடியாக கைது செய்து குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு குற்றச்சம்பவங்கள், போதைப்பொருட்கள் நடமாட்டம்  அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்தஅதிமுக ஆட்சியில் இருந்தை விட  திமுக ஆட்சியில், சென்னை, நெல்லை,  திருப்பூர், கோவை, கடலூர் மற்றும் தருமபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடுமையான குற்ற வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக காவல்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கொலை, கொள்ளை, வழிப்பறி, செயின் பறிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் உள்ளிட்ட வழக்குகள் காவல்நிலையத்தில் அதிகளவில் பதிவாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, அதை கட்டுப்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வப்போது காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தாலும், பல குற்ற சம்பவங்கள், போதை பொருட்கள் விற்பனை போன்றவை ஆளும் கட்சியினரால் அரங்கேற்றப்படுவதால், காவல்துறையினர் முறையான நடவடிக்கை எடுக்க சூழலில் உள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் கடந்த வாரத்தில் மட்டும் ஒரு பெண் உட்பட மொத்தம் 26 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காவல் துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர். உத்தரவின்பேரில், கடந்த 01.01.2024 முதல் 24.01.2024 வரை சென்னை பெருநகரில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 31 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 14 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 13 குற்றவாளிகள் மற்றும் சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 2 குற்றவாளிகள் என மொத்தம் 60 குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் கடந்த 18.01.2024 முதல் 24.01.2024 வரையிலான ஒரு வாரத்தில் 1 பெண் உட்பட 26 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

குற்றவாளிகள் 1.நயன் பக்டி, வ/28, த/பெ.நில்ரடன் பக்டி, பர்தமான் மாவட்டம், மேற்கு வங்காளம் என்பவர் கடந்த 28.12.2023 அன்று கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக, C-1 பூக்கடை காவல் நிலையத்திலும், 2.மாரிமுத்து (எ) மாரி (எ) ஆலிகுடி மாரி, வ/37, த/பெ.சங்கரவேல் தேவர், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, தூத்துக்குடி மாவட்டம் என்பவர் கடந்த 05.09.2023 அன்று ஜெகன் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக V-7 நொளம்பூர் காவல் நிலையத்திலும், 3.அகஸ்டின் (எ) கான்டு, வ/29, த/பெ.சார்லஸ், வடபழனி, சென்னை என்பவர் கடந்த 22.12.2023 அன்று கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக அண்ணா நகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவிலும் (PEW/AnnaNagar) வழக்குகள் பதிவு செய்து, கைது செய்ப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.