2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 132 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வைஜெயந்தி மாலா பாலி, பத்மா சுப்ரமணியம், சிரஞ்சீவி, வெங்கையா நாயுடு மற்றும் பிந்தேஸ்வர் பதக் ஆகிய 5 பேருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்படுகிறது.

விஜயகாந்த், மிதுன் சக்ரவர்த்தி, உஷா உதூப் உள்ளிட்ட மொத்தம் 17 பேருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்படுகிறது. இது தவிர 110 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.

இதில், தைவான், பிரான்ஸ், பப்புவா நியூ கினியா, மெக்ஸிகோ மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுளளது.

40,000துக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ள தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனத் தலைவர் யங் லியு-விற்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட உள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சார்லோட் சோபின் மற்றும் கிரண் வியாஸ் ஆகிய இருவருக்கும் யோகாவுக்கான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரெட் நெக்ரிட் மற்றும் பியர்ரி சில்வியன் பில்லியோசாட் ஆகிய இருவருக்கும் இலக்கியம் மற்றும் கல்விக்கான பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.

மெக்ஸிகோ நாட்டில் வசிக்கும் இந்தியரான ரவி பிரகாஷ் சிங்-கிற்கு அறிவியல் மற்றும் பொறியியல் துறைக்கான பத்மஸ்ரீ விருதும்

ரவீந்திரநாத் தாகூரின் பாடல்களை பாடக்கூடிய பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ரவீந்திர சங்கீத கலைஞர் ரிஸ்வானா சௌத்ரி பன்யா-வுக்கு கலைத்துறைக்கான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது.

மேலும், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பப்புவா நியூ கினியா நாட்டைச் சேர்ந்த தமிழரும் அந்நாட்டின் வெஸ்ட் நியூ பிரிட்டன் மாகாண கவர்னருமான சசீந்திரன் முத்துவேலுக்கு இந்திய பசிபிக் பிராந்திய நல்லுறவை வளர்ப்பதற்கான பொது விவகாரத்துக்கான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது.

அசாமைச் சேர்ந்த இந்தியாவின் முதல் பெண் யானை பராமரிப்பாளர் பர்பதி பருவா-வுக்கு பத்மஸ்ரீ விருது