சரத்குமார் வீட்டில் வருமானவரி சோதனை

Must read

சென்னை:

இடைத்தேர்தல் நடக்கும் ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா நடந்தது தொடர்பாக  இன்று காலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 30 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட 30 இடங்களில் இந்த சோதனை நடக்கிறது.

சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் 10 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருறார்கள்.  சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு நேற்றுதான் சரத்குமார் ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article