சென்னை:  புரசைவாக்கம், தி.நகர்  உள்பட 4 பகுதிகளில் செயல்பட்டு சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வணிக நிறுவனங்கள் சரிமுயான முறையில் வரி செலுத்தவில்லை என்றோரோ, வரி செலுத்துவதில் முறைகேடு என்று சந்தேகித்தாலோ வருமான வரித்துறையினர் அந்த நிறுவனங்களுக்கு சென்று சோதனை நடத்தி ஆய்வு செய்வது வழக்கம்.  சிறிய அளவிலான முறைகேடு என்றதால், சில விவரங்கள் கேட்டு, வரி செலுத்துவோருக்கு வருமான வரித் துறை தாக்கீது (`நோட்டீஸ்’) அனுப்பும். குறித்த காலத்துக்குள் அதற்கு சரியான பதில் வரவில்லை எனில், (அ) தரப்பட்ட பதில் திருப்தி தருவதாக இல்லை எனில், அடுத்த `நகர்வு’ அவசியம் ஆகலாம். தாக்கீது அனுப்பாமலும் சோதனையில் இறங்க வேண்டி வரலாம். அதே வேளையில், வருமான வரி செலுத்துவதில் முறைகேடு செய்திருப்பதாக சந்தேகித்தாலோ,  கணக்கில் காட்டப்படாத ரொக்கம் இருப்பு (அ) பரிமாற்றம் பற்றிய தகவல் தெரிந்தால், அப்போது உடனடியாக வரித்துறை சோதனையில் இறங்கலாம்.

இந்த நிலையில், சென்னையில் அமைந்துள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ்க்கு சொந்தமான புரசைவாக்கம், தி.நகர், போரூர், குரோம்பேட்டை   பகுதிகளில் அமைந்துள்ள கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனையில் இறங்கி உள்ளனர்.

வருமான வரி ஏய்ப்பு, கணக்கில் வராத முதலீடு செய்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.