சசிகலா பினாமி பெயரில் வாங்கிய ரூ.15 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

Must read

சென்னை; சசிகலா பினாமி பெயரில் வாங்கிய ரூ.15 கோடி சொத்துகளை முடக்கம் செய்து வருமானவரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் காரணமாக தி.நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக, உடன்பிறவா சகோதரியாக இருந்து வந்த சசிகலா, முறைகேடாக பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை அவர் பெயரிலும், அவரது குடும்பத்தினர் மற்றும் பினாமிகளின் பெயரிலும் வாங்கி குவித்துள்ளார். இதுதொடர்பான அப்போது  வருமான வரித்துறை நடத்திய  மிகப்பெரிய அளவிலான சோதனையையில் சசிகலா மற்றும் சசிகலா உறவினர்கள் நண்பர்கள் என சுமார் 150 இடங்களுக்கு சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பல கோடி ரூபாய் வரியைப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கணக்கில் வராத பல கோடி ரூபாய் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் 4430 கோடி ரூபாய் வருமான வரி இணைப்பு செய்ததாக வருமானவரித்துறை தெரிவித்திருந்தது.

இதற்கிடையில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் அவரை சிறையில் அடைக்க உச்சநீதிமன்றம் உத்தர விட்டது. அதன்படி, அவர்  4 ஆண்டுகளை பெங்களூரு சிறையில் கழித்தார். அதைத்தொடர்ந்து, ரூ.100 கோடி அபராதமும் செலுத்தி, 4ஆண்டுகள் தண்டனையை முடித்து விடுதலையானார்.

அவர்மீது இன்னும் மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதன் காரணமாக சசிகலாவுக்கு சொந்தமான ரூ.2ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளது. .2019 ஆம் ஆண்டு 1600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும், இதற்கு அடுத்தபடியாக 300 கோடி ரூபாய் மதிப்பிலான 65 சொத்துக்களையும் வருமான வரித்துறை முடக்கியது. கடைசியாக 2ஆயிரம் கோடி மதிப்பிலான  சிறுதாவூர் பங்களாவை யும் முடக்கியது.

இந்த நிலையில், சசிகலா பினாமி பெயரில் வாங்கிய ரூ.  ரூ.15 கோடி சொத்துகள் தற்போத முடக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கில், சசிகலா பினாமி பெயரில் சொத்து வாங்கியதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளதால்,  வருமான வரித்துறை சொத்துகளை முடக்கியுள்ளது.  அதன்படி, சென்னை தி.நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக அந்த நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மூன்று மாதங்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

More articles

Latest article