கருக்கலைப்பு: 15 வயது மாணவி பலி

Must read

த்தாம் வகுப்பு பள்ளி மாணவி ஒருத்தி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, திடீரென மயங்கி விழுந்திருக்கிறார். அங்கிருந்தவர்கள் உடனே பதறிப்போய் அந்த சிறுமியை அவசர அவசரமாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர்.

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே மாணவி உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கின்றனர். விஷயம் போலீசாருக்கு சென்று அவர்கள் விசாரித்தபோதுதான், மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு முன்பாக மாணவிக்கு கருக்கலைப்பு மாத்திரைகள் கொடுக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

அந்த மாணவியுடன் நெருங்கிப் பழகி கர்ப்பமாக்கிய பக்கத்து வீட்டுக்காரரான 27 வயது இருபத்தி ஏழு வயது முருகன் என்ற இளைஞர், கருவைக் கலைப்பதற்காக கிராமத்து “மருத்துவச்சி” யிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு சிறுமிக்கு மருத்துவச்சி ஏதேதோ மாத்திரைகள் கொடுத்து இருக்கிறார். அதை சாப்பிட்டு நடந்து வரும் போதுதான் சிறுமி மயங்கி விழுந்திருக்கிறார். சிறிது நேரத்திலேயே உயிர் பிரிந்து இருக்கிறது.

சிறுமியின் தாயார் குவைத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் தந்தை கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சிறுமியின் இரண்டு தம்பிகள் எட்டாவது மற்றும் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில்தான் சிறுமியிடம் நெருங்கி பழகி இருக்கிறார் முருகன். இதற்கு உடந்தையாக இருந்த முருகனின் நண்பன் பிரபு என்ற 27 வயது இளைஞனும் கருக்கலைப்பிற்கு மூல காரணமாக இருந்திருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் முருகன் மற்றும் பிரபு ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மருத்துவச்சி என்று சொல்லப்படும் 65வயது காந்தி என்ற பெண் தலைமறைவாகி விட்டதால் அவரை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை அருகே தான் தற்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

More articles

Latest article