அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

2023ம் ஆண்டில் 200 நாட்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.625 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

151 நாட்கள் முதல் 199 நாட்கள் வரை பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.195 ம், 91 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை பணிபுரிந்தவர்களுக்கு ரூ.85 வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒழுங்கு நடவடிக்கை தொடரப்பட்டுள்ளவர்கள் மற்றும் ஆண்டின் கடைசி நாள் பணிக்கு வராத ஊழியர்களுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படாது என்று அதில் குறிப்பிட்டுள்ளது.