தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சி கழகம் சார்பில் ஆண்டுதோறும் சென்னை தீவுத்திடலில் நடத்தப்படும் பொருட்காட்சி நாளை தொடங்குகிறது.

48வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி ஜனவரி 12-ல் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தீவுத்திடலில் நடைபெறும் இந்த பொருட்காட்சியை அமைச்சர் உதயநிதி ஜன.12 ஆம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கிவைக்கிறார்.

பொதுமக்கள் ஜன. 12 மற்றும் ஜன. 13 ஆகிய தேதிகளில் கட்டணமின்றி பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சங்கமம் நிகழ்ச்சி ஜன. 13 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.