மேற்குவங்கத்தில் பரபரப்பு: ராணுவம் குவிப்பு கண்டித்து தலைமை செயலகத்தில் மம்தா உள்ளிருப்பு போராட்டம்

Must read

கொல்கத்தா,
மேற்குவங்க மாநில தலைமை செயலகம் அருகே ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் மம்தா தலைமை செயலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 2 சுங்கச்சாவடி மற்றும் தலைமை செயலகத்துக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தினர், அங்கிருந்து வெளியேறும் வரை தலைமை செயலகத்தைவிட்டு வெளியேற மாட்டேன் என்று ேமற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.
மத்திய அரசு  ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்ததற்கு,  மத்திய அரசின் இந்த அறிவிப்பை திரும்பக் பெறக்கோரி மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, மோடியை பதவியில் இருந்து நீக்கும் வரை ஓயமாட்டேன் என்று சவால் விடுத்தார்.
kalcutta
இதற்கிடையில்  டெல்லியில் இருந்து கல்கத்தா வந்த மம்தா  விமானம் உடனடியாக தரையிறங்காமல் வானத்திலேயே வட்டமடித்தது. இது தம்மை கொலை செய்ய நடந்த சதி என்று மம்தா கூறி பரபரப்பை கூட்டினார். இதற்கிடையில், மேற்குவங்கத்தின் முக்கியத்துவம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலை 22ல் உள்ள டங்குனி மற்றும் பால்ஷிட் சுங்கச்சாவடிகளில் நேற்று ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.
இந்த தகவல் கிடைத்ததும் மம்தா மேலும் கோபத்தின் உச்சிக்கு சென்றார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:-
மேற்குவங்கத்தில் ராணுவ குவிப்பு என்பது நெருக்கடி நிலையை விட ேமாசமானது. ராணுவம் பயிற்சிக்காக மாநிலத்துக்குள் வந்துள்ளது என்றால், அதற்கு முறைப்படி மாநில அரசிடம் அனுமதி வாங்கியிருக்க வேண்டும். ஆனால் அப்படி எந்த ஒரு அனுமதியும் பெறவில்லை.
மேலும் பாதுகாக்கப்பட்ட பகுதியான மேற்குவங்க தலைமை செயலகம் நபான்னோ அருகில் ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு மேற்கு வங்க போலீசார் எதிர்ப்பு தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை.
எனவே, மாநிலத்தில் இருந்து ராணுவம் வெளியேறும் வரை, நான் தலைமை செயலகத்தில் இருந்து வெளியேற மாட்டேன். அதுவரை ஜனநாயகத்தை பாதுகாக்க ராணுவத்தின் நடவடிக்கைகளை நான் உன்னிப்பாக கவனிப்பேன் என்றார்.
மத்திய அரசின் ராணுவ நடவடிக்கை குறித்து, ஜனாதிபதிக்கு, தலைமை செயலாளர் கடிதம் எழுதுவார் என்றார். மேலும்  மேலும் இந்த விவகாரத்தில் கிழக்கு பிராந்திய ராணுவ அதிகாரி மக்களை தவறாக வழி நடத்த வேண்டாம். உண்மை என்ன என்பதை தயவு செய்து மக்களிடம் கூற வேண்டும் என்றார்.
ஆனால், மம்தாவின் இந்த போராட்டம் குறித்து கூறிய  கிழக்கு பிராந்திய ராணுவ உயரதிகாரி,
மேற்குவங்க மாநில சுங்கச்சாவடியில் ராணுவத்தினர் வாகனங்களை சோதனை செய்கின்றனர். மற்றொரு சாவடியில் ஏற்கனவே அந்த வாகனம் சோதனை செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வார்கள். இது வழக்கமாக நடந்து வரும் நடவடிக்கைதான். இது ராணுவ குவிப்பு அல்ல என்றார்.

More articles

Latest article