பெரியாரின் கறுப்புச் சட்டையும் கலைஞரின் மஞ்சள் துண்டும்  – சிறப்புக்கட்டுரை
                                                                                                                                         – ராஜா சேரமான்
வெள்ளை நேர்மறை சிந்தனையானது. கறுப்பு எதிர்மறை சிந்தனையானது. இப்படியொரு கருத்தியலை உலகம் உங்கள் முன்னால் வைத்திருக்கின்றது. இந்த சிந்தனை  உங்களுடையது அல்ல. ஆனால் இந்த சிந்தனையை முழுவதுமாக நீங்கள் ஏற்றுக்கொண்டு விட்டீர்கள்.
உண்மையில் நாம் கறுப்பையும், வெள்ளையையும் ஒன்றாகவே பார்த்தோம். அதனால்தான் முன்பு கணவனை இழந்தை பெண்கள் வெள்ளைச்சேலை அல்லது கறுப்புச் சேலை கட்டினார்கள்.
சிவப்பு, பச்சை, நீலம் இந்த மூன்று நிறங்களும்தான் அடிப்படை. இந்த நிறங்களை எந்த விகிதத்தில் கலக்கி றோமோ அதற்கு ஏற்ற வண்ணங்களைப் பெறலாம்.
உங்களுக்கு என்ன நிறம் பிடிக்கும்? உலக அளவில் இந்தக் கேள்விக்கு பெரும்பான்மையானவர்களின் பதில் நீலம். இதற்கு பிரத்தியோக காரணம் எதுவுமில்லை. நம் கண்ணில் அதிகமாக படுவது நீலநிறம்தான்.
சிவப்பு கோபத்தின் அடையாளம். பச்சை அன்பின் அடையாளம். அதனால்தான் காளிக்கு சிவப்பு நிறத்தையும், மாரியம்மனுக்கு பச்சைநிறத்தையும் ஆடையாக்கினோம். இடைக்குலத்திலே பிறந்த கண்ணன் எல்லோருக்கும் பிடித்தமானவனாக இருந்தான். அதனால்தான் நீலமேனியனாக கொண்டாடினோம்.
peryar
காரொளி வண்ணனே கண்ணனே என்று தொண்டரடிப் பொடியாழ்வார் உருகிறார். கறுப்பு கண்ணனை நினைத்து.
ஆனால் இன்று கடவுளின் நிறம் வெள்ளையாகவும்,  அரக்கர்களின் நிறமாக கறுப்பும் சித்தரிக்கப் பட்டுவிட்டது. இந்த நிறப்புனைதல் வெள்ளை நிறம் கொண்டவர்கள் தேவர் கள் அம்சம், கறுப்பு நிறம் கொண்டவர்கள் அரக்கர்களின் அம்சம் என்கிற கருத்தியலை உருவாக்கிவிட்டது. அதனால்தான் ஏழே நாட்களில் பளிச்சென்ற வெண்மை என்கிற விளம்பரம் காலகாலமாய் எடுபடுகிறது மக்களிடம்?
அறிவு புரட்சியால் மட்டுமே இந்த பாகுபாட்டை நீக்க முடியும். சிவப்பு அழகு கிரீம்களால் அல்ல என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த நிறப்பாகுபாடு.  உலகம் முழுவதும் நிரம்பி வழிகிறது. வெள்ளை ஆதிக்க சக்தியாகவும், கறுப்பு ஒடுக்கப்பட்ட வர்களின் நிறமாகவும் இருக்கிறது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் அது இன்னும் தீவிரமான ஒன்று.
வெள்ளையர்கள் தன் நிறத்தை நினைத்து பெருமை கொள்ளும்போது, கறுப்பாய் இருப்பது பெருமை என்று ஏன்நம்மால் இறுமாப்பு கொள்ள முடியவில்லை?
karuna
கறுப்பாக இருப்பவனின் உள்ளங்காலும் வெள்ளையாகத்தான் இருக்கிறது.  வெள்ளையாக இருந்தாலும் தலை கறுப்பாக இருக்கிறது. காலடியில் இருக்கும் நிறத்தை பெரிதாக நினைக்கும் நீங்கள், உங்கல் தலையில் இருக்கும் நிறத்தை ஏன் சிறுமையாக கருதுகிறீர்கள்?
வயதானாலும் தலைமுடி கறுப்பாக இருக்கத்தானே விரும்புகிறோம். பிறகு ஏன் தோல் மட்டும் வெள்ளையாக வேண்டும்?
உலகத்தை காலடியில் வீழ்த்திய கிளியோபட்ரா கறுப்பு என்றுதானே படித்திருக்கி றோம். இசையால் உலகை ஆடவைத்த மைக்கேல் ஜாக்சன் நிறத்தை மாற்றிக் கொண்டாலும் கறுப்பன் என்றுதானே அடையாளப் படுத்தப் பட்டான்.
விவசாயத்துக்கு பசுமைப் புரட்சி, பாலுக்கு வெண்மைப் புரட்சி, மீனுக்கு நீலப் புரட்சி, மரம்வளர்ப்புக்கு சாம்பல் புரட்சி, எண்ணெய் உற்பத்தில் தன்னிறைவு அடைய மஞ்சம் புரட்சி என இங்கே புரட்சிகள் அனைத்துமே நிறத்தை மையப்படுத்தியே நிகழ்த்தப் படுகின்றன.  கம்யூனிசப் புரட்சி சிவப்பு நிறத்தை முன்னெடுத்தது. பெரியார் பகுத்தறிவு புரட்சிக்கு கறுப்பை தேர்ந்தெடுத்தார்.
மற்ற புரட்சிகளுக்கான நிறத்தேர்வையும் பெரியாரின் நிறக் கொள்கையையும் ஒரே தளத்தில் வைத்து பார்க்க முடியாது.
ஏனைய புரட்சிகள், நிறத்தின் தன்மை கருதி சூட்டப்பட்டது. பெரியாரின் நிறத்தேர்வு வண்ணத்தை முதன்மை யாகக் கொண்டது அல்ல. திராவிடர்களின் நிறத்தை முன்னெடுத்தது.
மங்கலம் – அமங்கலம், உயர்வு – தாழ்வு இவையெல்லாம் நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதுபோல் நிறங்களில் இல்லை. நீங்கள் வெல்ல வேண்டியது உங்களுடைய மனங்களை. வெள்ளை உயர்வென்று கருதும் தவறான எண்ணத்தை.
அதனால்தான் அவர் கறுப்பு நிறத்தை பெருமைப் படுத்தினார். இந்த நிறத்தேர்வின் மூலம் கறுப்பு நிறத்தை பூர்வ மாகக் கொண்ட திராவிடர்களுக்கு தெம்பூட்டினார்.
பகுத்தறிவு பாசறையில் பாடம்படித்தவர்கள் கறுப்பு ஆடை அணிந்து திருமணம் செய்து வாழ்ந்து காட்டினர். எல்லா மங்கல நிகழ்ச்சிகளிலும் கருப்பு ஆடைகட்டி வந்தனர்.
periyar-with-karuna
திருமணங்களில் இப்போதெல்லாம் பட்டுச் சட்டை பட்டுவேட்டிக்குப் பதில் கறுப்புநிற கோட்சூட் அணியப்படு கிறது. இதை பகுத்தறிவு புரட்சிக்கு கிடைத்த வெற்றியாகக் கருதமுடியாது. இது நம் தொன்மை அடையாளத்தின் தோல்வி. மேலைநாட்டு மோகத்தின் வெற்றி.
பெரியார் விரும்பியது வெறும் நிறப் புரட்சியை அல்ல.  கீழ்மையாக எண்ணப்படும்  கறுப்பு நிறத்தின் மீது மரியா தையை ஏற்படுத்த நினைத்தார். நிறவெறியை வென்றெடுக்கும் வீரத்தை மனதில் விதைக்க நினைத்தார். கருப்பு நிற திராவிடனுக்கு எங்கும் எதிலும் முதல் மரியாதை கிடைக்கவேண்டுமென விரும்பினார். அதை செய்யாமல் கறுப்புச் சட்டை அணிவது பகுத்தறிவு என நினைப்பது அடையாளம் எதை சாதிக்கும்?
திருமணங்களில் கறுப்பு ஆடை அணிவது காலகாலமாக நம்பிக்கைக்கு உரியதாக இருந்த மஞ்சள் நிறத்துக்கு எதிரான போரல்ல.   நல்ல காரியம் நடக்கும்போது கறுப்பு ஆடை அணிவது பெரியார் நமக்கு பெற்றுத்தர நினைத்த விடுதலையும் அல்ல. எனவே  கலைஞரின் மஞ்சள் துண்டை பகுத்தறிவின் தோல்வி என்று கருதுவதைவிட  நிறங்களைக் கடந்த சிந்தனை என்று கருதவும் இடமுண்டு.
நிறங்களின் குணங்கள் பற்றிய ஒரு ஆராய்ச்சி வெளியீடு குழப்பமான மனநிலை உள்ளவர்களுக்கு மஞ்சள்நிறம் நல்ல பலனைத் தந்துவிடும் என்கிறது.
குடும்பமா மக்களா என்ற குழப்பம் கலைஞருக்கு ஏற்பட்டபோது உதவும் என்று மஞ்சள் துண்டுக்கு மாறியிருக்க வேண்டும். இப்போது குழப்பம் தீர்ந்துவிட்டது. ஸ்டாலின் திமுகவின் செயல் தலைவராக அறிவிக்கப்பட்டு விட்டார்.