மோடியை விமர்சித்து திரிணாமூல் வெளியிட்ட 007 போஸ்டர்

Must read

கொல்கத்தா:
மோடியை விமர்சித்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மோடியை ‘ஜேம்ஸ் பாண்ட் 007’ ஏஜண்டாக மாற்றி கிண்டல் அடித்துள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் டெரிக் ‘ஓ’பிரைன் தனது பேஸ்புக் பக்கத்தில் பிரதமர் மோடியின் ஏழு ஆண்டு சாதனை விமர்சிக்கும் வகையில் கிண்டலாக மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வெளியிட்ட மீமில் பிரபல ஜேம்ஸ் பாண்ட் போஸ்டரில் ஜேம்ஸ்பாண்டுக்கு பதிலாக பிரதமர் மோடி நடந்துவருவது போலவும் அவருக்கு கீழ் ‘007’ என்கிற டைட்டிலும் உள்ளது.

இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் புதிய விளக்கத்தை அளித்துள்ளனர். கடந்த ஏழு ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி பூஜ்ஜியம், பொருளாதார வளர்ச்சி பூஜ்யம் என்று என்பதை சுட்டிக்காட்டும் விதமாக ‘007’ அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article