சென்னை

மிழகத்தில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் கொரோனாவால் உயிரிழந்தோரில் 89% பேர் தடுப்பூசி  போடாதோர் என ஆய்வறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.  நேற்று வரை தமிழகத்தில் மொத்தம் 28,71,411 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 35,682 பேர் உயிர் இழந்து 26,18,980 பேர் குணம் அடைந்து தற்போது 16,749 பேர் சிகிச்சையில் உள்ளனர்.. கொரோனா மரணம் குறித்த ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது.

அதில், ”கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய இரு மாதங்களில் தமிழகத்தில்  1268 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதில் 1129 பேர் தடுப்பூசிகள் போடாதோர் ஆவார்கள்.  இது சுமார் 89% ஆகும்.  மேலும் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டவர்கள் 94 பேர் (7.41%) மற்றும் இரண்டு டோஸ் கொரோனா ஊசி போட்டவர்களில் 45 பேர் (3.55%) பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

கடந்த இரு மாதங்களில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டோரில் 74.14% பேர் தடுப்பூசி போடாதவர்கள் ஆவார்கள்,  தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டோரில் 17.4% பேர் ஒரு டோஸ் தடுப்பூசியும் 8.317% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியும், செலுத்திக் கொண்டுள்ளனர்.

இந்த இரு மாதங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 33,575 பேரில் 70.97% பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை.   தவிர 17.93% பேர் முதல் டோஸ் தடுப்பூசியும் 11.10% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.