புதுடெல்லி:

கடந்த ஒரு மாதத்தில் ஃபேஸ்புக் விளம்பரத்துக்காக மட்டும் பாஜக தரப்பில் ரூ. 2.3 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.


கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் சமூக வலைதளங்களில் பாஜக தரப்பு செய்த விளம்பரம், பதிவுகள் ஆகியவை ஆட்சியைப் பிடிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இதனையடுத்து, பாஜக ஆதரவு பதிவர்களை வேலைக்கு அமர்த்தி கோடிக்கணக்கான பணத்தை தண்ணீராக இறைத்து வருகிறது பாஜக.

இம்முறை மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்காக விளம்பரங்களுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்ய பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை, நாடு முழுவதும் உள்ள நாளேடுகளுக்கு தினமும் ஒரு பக்க விளம்பரம் அரசு செலவில் வழங்கப்பட்டது.

இதனையடுத்து, அடுத்த கட்டமாக ஃபேஸ்புக்கை குறிவைத்துள்ளது பாஜக.
ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்யப்படும் 10 விளம்பரங்களில், 8 விளம்பரங்கள் பாஜக தொடர்புடையதாகும்.

‘நமோவுடன் தேசம்’ என்ற 115 பாஜக ஆதரவு விளம்பரத்துக்காக மட்டும் ரூ.63 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது.