செனிகல்: பறவைகளை வைத்து பாவமன்னிப்பு பிசினஸ்

Must read

செனிகல் மேற்கு ஆப்பிரிக்காவில், செனிகல் நதியின் தெற்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இங்கு நிலவும் ஒரு விநோதமான ஒரு மதநம்பிக்கை பற்றி தற்போது தெரியவந்துள்ளது.

birds

அங்கு சிலர் தெருக்களில் பறவைக்கூண்டு ஒன்றில் ஏராளமான பறவைகள் வைத்து விற்பது வழக்கம். எதற்கு தெரியுமா? ஒருவர் ஏதேனும் பாவம் செய்திருந்தால் தான் செய்த பாவத்தின் அளவுக்கு தக்கதாக பறவைகளை விலைக்கு வாங்கு அதை வானத்தில் விடுதலையோடு பறக்கவிடுவதன் மூலம் தங்கள் செய்த பாவம் தீர்ந்துவிட்டதாக நம்புகிறார்கள். வேறு சிலர் தங்களுக்கு ஏதேனும் தேவைகள் இருந்தால் பறவைகளை வாங்கி அவற்றின் காதுகளில் தங்கள் விண்ணப்பத்தை இரகசியமாக சொல்லி பறக்கவிட்டு விடுகிறார்கள்.
செனிகல் இஸ்லாமிய நாடாக இருப்பதால் இது குரான் போதிப்பதற்கு முரணான பழக்கம் என்று எதிர்ப்பு குரல்களும் எழும்பாமல் இல்லை. ஆனால் அதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொல்லாமல் பாவமன்னிப்பு பிசினஸ் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
இதில் ஒரு பெரிய காமெடி என்னவென்றால் பறவை வியாபாரி பறவை தனது வீட்டுக்கே திரும்பும்படி பழக்கி வைத்திருப்பார். ஏற்கனவே விற்கப்பட்ட பறவை மறுபடியும் பலமுறை விற்கப்படும் வாய்ப்புகள் நிறையவே உண்டு, சிலர் பில்லிசூனிய நோக்கங்களுக்காக இந்த சடங்கை பயன்படுத்துவதுண்டு. அதாவது யாரேனும் நாசமாக போகவேண்டுமென்றால் பறவைகளை வாங்கி தங்களுக்கு பிடிக்காதவர்களின் பெயரை பறவையின் காதில் உச்சரித்து சபித்து பறக்க விட்டுவிடுவார்கள். அப்படிப்பட்ட பறவைகள் விற்பவரிடம் மறுபடியும் திரும்பாதாம்.

More articles

1 COMMENT

Latest article