nobel-winners-physics
ஸ்வீடன்:
2016ம் ஆண்டிற்கான வேதியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 3 நாட்டு விஞ்ஞானிகளுக்கு இந்த பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
மருத்துவம் மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வேதியியல் நோபல் பரிசினை பிரான்ஸ் விஞ்ஞானி ஜீன் பியர் சாவேஜ், ஸ்காட்லாந்து விஞ்ஞானி பிரேசர் மற்றும் நெதர்லாந்து விஞ்ஞானி பெர்னாட் பெரிங்கா ஆகியோர் இணைந்து பெறுவார்கள் என நோபல் பரிசுக்குழு அறிவித்துள்ளது.
மூலக்கூறுகள் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக இந்த பரிசு வழங்கப்படுகிறது.
விஞ்ஞானி பிரேசர், அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.
ஜீன் பியர் சாவேஜ், ஸ்ட்ராஸ்பர்க் பல்கலைக்கழகத்திலும், பெர்னாட் பெரிங்கா, குரோனிங்கன் பல்கலைக்கழகத்திலும் பணிபுரிகின்றனர்.
மிக உயரிய பரிசாக கருதப்படும் அமைதிக்கான நோபல் பரிசு 7-ம்தேதி அறிவிக்கப்படுகிறது.
அதன்பின்னர் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 10-ம் தேதி அறிவிக்கப்படுகிறது.